திருப்புவனம் இளைஞர் மரணம் - கொதித்தெழுந்த சீமான்
சிவகங்கை திருப்புவனத்தில் இளைஞர் அஜித் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மர்ம மரணம் அடைந்த நிலையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்...
சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதியாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள சீமான், கடந்த 4 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை என குற்றம் சாட்டியுள்ளார்...
தமிழ்நாடு அரசு, காவலர்கள் மீது உடனடியாக கொலை வழக்கு பதிவதோடு, குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்..
Next Story
