திருப்பூரில் உள்ள உடுமலை வனப்பகுதியில் இருந்து அரிய வகை நட்சத்திர ஆமையை கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவரை கேரள வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சின்னார் வனத்துறை சோதனை சாவடியில், வாகன சோதனையின்போது, சசி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து ஆமைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கைக்காக, உடுமலை வனத் துறையிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தனர்.