மூடப்பட்டு இருந்த ரயில் பெட்டி கதவுகள் - ஏறமுடியாமல் தவித்த வடமாநில பயணிகள்

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
மூடப்பட்டு இருந்த ரயில் பெட்டி கதவுகள் - ஏறமுடியாமல் தவித்த வடமாநில பயணிகள்
Published on

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அஸ்ஸாம் மாநிலத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், வாக்களிப்பதற்காக அங்கு செல்ல ரயிலில் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் வழியாக அஸ்ஸாம் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலின் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்ததால், பயணிகளால் அதில் ஏறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாரம் ஒரு நாள் மட்டுமே இயக்கப்படும் ரயிலில் ஏறமுடியாததால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com