Tiruppur Preethi Death | நெஞ்சை உலுக்கிய திருப்பூர் பிரீத்தி மரணம் - உடலை கையில் வாங்கி கதறிய தாய்

x

வரதட்சணை கொடுமையால் பெண் மரணம் - உடல் பெற்றோரிடம் ஓப்படைப்பு

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்து கொண்ட இளம்பெண் ப்ரீத்தியின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்ததையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் - தாராபுரம் சாலை, கே.செட்டிபாளையம், பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பிரீத்தி வரதட்சணை கொடுமையால் கடந்த செவ்வாய்கிழமை உயிரை மாய்த்து கொண்டார். இது தொடர்பாக பிரீத்தியின் கணவர் சதீஷ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நல்லூர் போலீசார் பிரீத்தியன் கணவர் சதீஷ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரிடம் விசாரணையை நடத்தி மூவரையும் கைது செய்தனர். இதையடுத்து பிரீத்தியின் உடலை பெற்ற உறவினர்கள் சடங்கு சம்பிரதாயங்களை முடித்து தகனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்