Tiruppur | அசுர வேகத்தில் அரசு பஸ் மீது மோதிய ஆம்னி பஸ் - உடல் நசுங்கி ஓட்டுநர் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அதிகாலையில் மூன்று அரசு பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். சாலக்கடை பகுதியில் உள்ள உணவகம் அருகே நின்றுகொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது, பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில், பேருந்துக்கு வெளியே நின்றிருந்த அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட 6 பயணிகள் படுகாயமடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com