Tiruppur | Mango Sales | சூடுபிடிக்காத மாம்பழம் சேல்ஸ் | கவலையில் திருப்பூர் வியாபாரிகள்
சூடுபிடிக்காத மாம்பழம் சேல்ஸ் | கவலையில் திருப்பூர் வியாபாரிகள்
திருப்பூரில் தேங்கும் 100 டன் மாம்பழங்கள் - வியாபாரிகள் கவலை கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையிலும், திருப்பூரில் மாம்பழங்கள் விற்பனை ஆகாமல் சுமார் 100 டன் அளவிலான பழங்கள் தேக்கமடைந்துள்ள சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில், சேலம், மாரடை மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட இமாம் பசந்த், அல்போன்சா, மல்கோவா உள்ளிட்ட பல்வேறு மாம்பழங்கள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 400 ரூபாய்க்கு விற்ற இமாம் பசந்த் தற்போது 200 ரூபாய்க்கு சரிந்துள்ள போதிலும், கடும் வெயில் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்ததால் போதிய வரவேற்பு இல்லாமல் ஒரு லட்சம் கிலோ மாம்பழங்கள் தேக்கமடைந்துள்ளதால் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ள வியாபாரிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர்.
