வீட்டு வேலை செய்வது போல் நடித்து ரூ.45,000 ரொக்கம், 20 சவரன் நகைகள் கொள்ளை

திருப்பூரில் வீட்டு வேலை செய்வது போல் நாடகமாடி 20 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை, திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வீட்டு வேலை செய்வது போல் நடித்து ரூ.45,000 ரொக்கம், 20 சவரன் நகைகள் கொள்ளை
Published on

திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில், வசித்து வரும் முகமது அன்சாரி என்பவர் ரேஷ்மா என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு அமர்த்தியுள்ளார். ரேஷ்மா வீட்டு வேலை செய்வது போல் நடித்து, வீட்டில் அனைவரும் இருந்த போதே, பீரோவை திறந்து, 20 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை, திருடிச் சென்றுள்ளார். பின்னர் உடல்நலக்குறைவு என கூறி, ரேஷ்மா விடுப்பு எடுத்துள்ளார். இதனிடயே திருமணம் ஒன்றிற்கு செல்வதாக, பீரோவில் இருந்த நகைகளை, எடுக்க பீரோவை திறந்த போது நகைகள் மாயமானதை கண்ட, முகமது அன்சாரி, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், ரேஷ்மா தாம் குடியிருந்த வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்ற போது, போலீசாரிடம் வசமாக சிக்கினார். ரேஷ்மாவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com