செல்லாத ரூபாய் நோட்டுகளை சேமித்திருந்த மூதாட்டிகள் : இருவருக்கும் உதவி தொகை

திருப்பூர் மாவட்டத்தில் செல்லாத ரூபாய் நோட்டுகளை சேமித்திருந்த மூதாட்டிகள் இருவருக்கும் உதவி தொகை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.
செல்லாத ரூபாய் நோட்டுகளை சேமித்திருந்த மூதாட்டிகள் : இருவருக்கும் உதவி தொகை
Published on
திருப்பூர் மாவட்டம் பூமலூரை சேர்ந்த சகோதரிகள் ரங்கம்மாள் மற்றும் தங்கம்மாள், தங்களின் சிகிச்சைக்கு பணம் சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்திருந்தனர். அப்போது தான் இருவரும் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக மொத்தம் 46 ஆயிரம் ரூபாய் வரை சேமித்து வைத்திருந்தது தெரியவந்தது. இவை செல்லாது என தெரியவந்ததும், இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தந்தி டிவியில் செய்தி ஒளிபரப்பானது. இதையடுத்து, இரண்டு மூதாட்டிகளையும் அழைத்து நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், முதியோர் உதவி தொகை மற்றும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான ஆணைகளை வழங்கினார்.
X

Thanthi TV
www.thanthitv.com