Tiruppur | SSI உடலை தோளில் சுமந்து சென்ற டிஜிபி சங்கர் ஜிவால் - 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

x

Tiruppur | SSI உடலை தோளில் சுமந்து சென்ற டிஜிபி சங்கர் ஜிவால் - 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

எஸ்எஸ்ஐ சண்முகவேலின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சிக்கனூத்து பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் இருவர் தற்போது சரணடைந்துள்ள நிலையில், உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அவரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு டிஜிபி சங்கர் ஜீவால், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் உட்பட பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து உடுமலை மின்மயானத்திற்கு கொண்டுவரபட்ட அவரது உடலுக்கு, 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கபட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்