

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குதிரையாறு சோதனை சாவடியில் இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் கஞ்சா விற்பனை செய்ய ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் தமிழகம் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இரு சக்கர வானங்களையும் பறிமுதல் செய்தனர்.