Tiruppur | திருப்பூரில் வட மாநில கேங் செய்த அட்டூழியம் - வீட்டில் ஆய்வு செய்த போலீசுக்கு ஷாக்
Tiruppur | திருப்பூரில் வட மாநில கேங் செய்த அட்டூழியம் - வீட்டில் ஆய்வு செய்த போலீசுக்கு ஷாக் திருப்பூரில் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து கஞ்சா கடத்திவரப்பட்ட நிலையில், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்... திருப்பூர் அருகே கஞ்சா கடத்திவரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் கஞ்சா கடத்திவரப்படுவது தெரிய வந்துள்ளது. துரித நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், ரயிலில் கடத்திவரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அவர்களது வீட்டில் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
