Tiruppur | ADMK | அதிமுக வேட்பாளர் பரமசிவம் தீவிர வாக்குசேகரிப்பு - மலர் தூவி தொண்டர்கள் வரவேற்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற அதிமுக வேட்பாளராக கே.பி. பரமசிவம் வெங்கிட்டாபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு சென்ற அவருக்கு பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பிரசாரத்தில் பேசிய பரமசிவம், பல்லடம் பகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என்றும், எந்த கட்சி வேட்பாளராலும் பல்லடம் பகுதியை வெல்ல முடியாது என்றும் தெரிவித்தார்..
