பாலாற்றில் பொங்கிய நுரை... அருகே சென்றால் குடலை குமட்டும் துர்நாற்றம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சைகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில், சில தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நேரடியாக ஆற்றில் திறந்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆற்று நீர் முழுவதும் வெண்மை நிறத்தில் நுரை படர்ந்து, துர்நாற்றம் வீசி வருகிறது. மாராபட்டு பாலாற்றில் நுரை செல்வது தொடர் கதையாகி வரும் நிலையில் அதிகாரிகள் கழிவுநீரை ஆற்றில் கலக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Next Story
