Tirupattur District News | கனமழையால் சாலையில் தேங்கிய கழிவு நீர் - வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. இதனால் கோணமேடு பகுதியில் மழைநீர் தேங்கி அதன் உபரி நீர் சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் சூழ்ந்தது. சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீருடன் கழிவுநீரும் தேங்கி இருந்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். மழை பெய்யும் போதேல்லாம் இப்பகுதியில் நீர் தேங்கி வருவதாகவும், அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

X

Thanthi TV
www.thanthitv.com