ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை பறித்து திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவு

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கிராம ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. குமாரமங்கலம் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் முனுசாமி. இவர் நீரோடை கால்வாயை ஆக்கிரமிப்பு செய்தள்ளதாக புகார் எழுந்த நிலையில், விளக்கம்கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் முனுசாமியின் விளக்கம் ஏற்புடையதாக இல்லாத நிலையில், காசோலையில் கையொப்பமிடும் அவரது அதிகாரத்தை ரத்து செய்து, மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்