முகத்தில் மிளகாய் போடி... உடம்பில் சரமாரி கத்தி குத்து - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

முன் விரோதம் காரணமாக மிளகாய்ப் பொடி தூவி கத்தியால் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் பங்கிவட்டம் பகுதியைச் சேர்ந்த விஜய்க்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் நில தகராறு காரணமாக முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு அதே பகுதியில் போதையில் தூங்கியதாகக் கூறப்படுகிறது. இதை பார்த்த வெங்கடேசன், அவரது முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பி ஓடினார். மருத்துவமனையில் விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com