Tirupattur | 2 குடும்பம் இடையே வெடித்த மோதல் - மாறி மாறி தாக்கி கொண்டு கொலை முயற்சி

Tirupattur | 2 குடும்பம் இடையே வெடித்த மோதல் - மாறி மாறி தாக்கி கொண்டு கொலை முயற்சி

2 குடும்பம் இடையே வெடித்த மோதல் - மாறி மாறி தாக்கி கொண்டு கொலை முயற்சி.. பதற வைக்கும் சிசிடிவி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நிலத் தகராறு காரணமாக இரு குடும்பங்கள் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் குமார் குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாரான சிவராமன் குடும்பத்தினருக்கு இடையே அரை அடி நிலம் தொடர்பாக நீண்டநாள் பிரச்சினை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை குமாரின் மாமியார் தெய்வானை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், மீண்டும் மாலை நேரத்தில் குமாரின் மனைவி சிவசக்தி, அவரது தந்தை மேகநாதன் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் என்றும் பாராமல் தாக்கியதுடன், இருசக்கர வாகனத்தை ஏற்றி கொல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com