Tirupattur | ஆசையாய் சிப்ஸ் பாக்கெட்டை பிரித்த குழந்தை.. உள்ளே செத்துக் கிடந்த `எலி’..

x

சிப்ஸ் பாக்கெட்டில் இறந்து கிடந்த எலி - குடும்பத்தினர் அதிர்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கடையில் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில், எலி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியின் குடும்பத்தினர், அருகிலிருந்த டீக்கடையில் இருந்து குழந்தைகளுக்கு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி கொடுத்துள்ளனர். அதில் ஒரு பாக்கெட்டை பிரித்த போது எலி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்த குடும்பத்தினர், விழிப்புணர்வு வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் பதிலளிக்கவும் மற்றும் மன்னிப்பு கேட்கவும் வேண்டும் என அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்