திருப்பதி லட்டு - தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை
திருப்பதி லட்டு என்ற பெயரில் லட்டு விற்பனை செய்த புஷ் மை கார்ட் நிறுவனத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. வெளிநாட்டு நிறுவனமான புஷ் மை கார்ட் நிறுவனம், திருப்பதி லட்டு என்ற பெயரில் லட்டு விற்பனையில் ஈடுபட்டது தேவஸ்தான நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து, தேவஸ்தானத்தின் அனுமதி இல்லாமல் புஷ் மை கார்ட் நிறுவனம், திருப்பதி லட்டு என்ற பெயரில் லட்டு விற்பனை செய்தது தவறு என்று சுட்டிக்காட்டி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், அந்த நிறுவனம் தன்னுடைய விற்பனைப் பட்டியலில் இருந்து லட்டுவை நீக்கி இருக்கிறது.
Next Story
