திருப்பதி கோசாலையில் பசுக்கள் இறப்பு என்ற புகாருக்கு மறுப்பு தெரிவித்த திருப்பதி தேவஸ்தானம்

x

திருமலை திருப்பதி தேவஸ்தானம் பராமரிக்கும் கோசாலையில் கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்ததாக முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி குற்றம் சாட்டினார். இறந்த பசுக்களை மறைக்க பிரேத பரிசோதனை கூட செய்யாமல் புதைத்ததாக புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார். இதனை மறுத்துள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கூறியிருப்பது முற்றிலும் தவறானது, தம்மை பிரபலப்படுத்திக் கொள்ள இவ்வாறு கூறி வருகிறார் என்று தெரிவித்தார். அதேபோல் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்