அரை நிர்வாணமாக சுற்றி திரிந்த வடமாநில நபர்.. சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வடமாநில நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
அந்த நபர் குழந்தைகளை கடத்தி செல்ல வந்தாரா? அல்லது கொள்ளையடிக்க வந்தாரா? என்ற சந்தேகத்தில், அப்பகுதி மக்கள் விரட்டி சென்று பிடித்து தாக்கியுள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த ரோந்து போலீசார் அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து, விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
Next Story
