இரவில் கேட்ட சத்தம்.. திறந்ததும் தெரிந்த கருப்பு உருவம்.. சுதாரிப்பதற்குள் வீடே அபேஸ்

x

திருப்பத்தூரில் வீடு புகுந்து கத்தி முனையில் நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜபாளையத்தை சேர்ந்த வீரபத்திரன் என்பவர் குடும்பத்தாருடன் வசித்து வரும் நிலையில், இரவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டதால் வீரபத்திரனின் தாயார் கதவை திறந்துள்ளார், சட்டென உள்ளே புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கத்தி முனையில் மிரட்டி பீரோவில் இருந்த 15 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த வீரபத்திரன் மற்றும் அவரது மனைவி சத்யா சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்