Tirupathur | அதிர்ச்சியில் செங்கல் சூளை தொழிலாளி.. தேடிவந்த ரூ.2.76 கோடி GST பாக்கி நோட்டீஸ்

x

Tirupathur | அதிர்ச்சியில் செங்கல் சூளை தொழிலாளி.. தேடிவந்த ரூ.2.76 கோடி GST பாக்கி நோட்டீஸ்

ரூ.2.76 கோடி GST வரி பாக்கி? - மிரண்டு போன செங்கல் சூளை தொழிலாளி

ஆம்பூர் அருகே விவசாயமும், செங்கல் சூளை வேலையும் பார்க்கும் ராஜ்குமார் என்பவருக்கு, 2 கோடியே 76 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ராஜ்குமார், காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றுள்ளார். அப்போது, 5 லட்சம் ரூபாய் வரை இருந்தால் மட்டுமே விசாரிக்க இயலும் எனக் கூறிய போலீசார், இதுபற்றி மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளிக்குமாறு கூறி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமாரும், அவரது குடும்பத்தினரும் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்