Tirupathur | காசு கேட்டதற்கு ஒரு தாக்குதல் கேஸு போட்டதற்கு ஒரு தாக்குதல் - சைக்கோ போல் மாறிய கஸ்டமர்

x

Tirupathur | காசு கேட்டதற்கு ஒரு தாக்குதல் கேஸு போட்டதற்கு ஒரு தாக்குதல் - சைக்கோ போல் மாறிய கஸ்டமர்

தகராறு - கடையை அடித்து நொறுக்கிய இளைஞர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் திண்பண்டத்திற்கு பணம் செலுத்த கூறியதால் கடை உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் செயல்படும் தேனீர் கடையில், புகழேந்தி என்ற இளைஞர் தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். உடனே பணத்தை செலுத்த உரிமையாளர் கூறியதால், புகழேந்திக்கும் உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புகழேந்தி கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் காவல்நிலத்தில் புகார் அளித்துள்ளார். தன் மீது புகார் அளித்ததை அறிந்த புகழேந்தி மீண்டும் இரண்டாவது முறையாக கடைக்கு வந்து பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து புகழேந்தியை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்