Tirupathur | Old Man | "எம்ஜிஆர் தந்த வண்டி.." | அமைச்சர் விழாவில் முதியவர் சொன்ன பதிலால் சிரிப்பலை
"எம்ஜிஆர் தந்த வண்டி.."
Tirupathur | Old Man | "எம்ஜிஆர் தந்த வண்டி.." | அமைச்சர் விழாவில் முதியவர் சொன்ன பதிலால் சிரிப்பலை நலத்திட்ட உதவி வழங்கும் போது எம்.ஜி.ஆர் பெயரை கூறிய முதியவர்-சலசலப்பு திருப்பத்தூரில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நல திட்ட உதவியை வழங்கிய போது, எம்.ஜி.ஆர் பெயரை கூறிய முதியவரால் சலசலப்பு ஏற்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் பேட்டரி வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனத்தை வழங்கினார். அப்போது இது யார் தந்த வண்டி என கேட்க, முதியவர் ஒருவர் எம்ஜிஆர் தந்த வண்டி என பதிலளித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த நபருக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது தெரிய வந்ததால், காது கேட்கும் கருவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
