நடுவீதியில் அடித்துக்கொண்ட தாய், மகள் - திருப்பத்தூரில் உச்சகட்ட பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மூன்று சென்ட் நிலத்திற்காக தாயுக்கும் மகளுக்கும் அடித்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரிபிரான் அவரின் பிள்ளைகளுக்கு சொந்தமான நிலத்தில், அவரது தம்பி குப்பனுக்கு மூன்று சென்ட் நிலத்தை எழுதி கொடுத்துள்ளார். அதை குப்பன் அவரது மகளான விஜயாவுக்கு 2022-ம் ஆண்டில் எழுதி கொடுத்துள்ளார். இந்த நிலையில் விஜயாவின் மகள் சங்கீதா என்பவர் கன்சூர்வீரன் என்ற நபரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார், சங்கீதா தனது தாயாரின் மூன்று சென்ட் நிலத்தில் பூமி பூஜை போட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரிபிரான் குடும்பத்தினரும் விஜயாவும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சங்கீதாவுக்கும் அவரது தாய் விஜயாவுக்கும் வாக்குவாதம் நடந்து சண்டையாக மாறியது. இது குறித்து திம்மம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
