Tirupathur Crime | மூதாட்டி கொடூர கொலை | Q பிரான்ச் ஆஃபிஸிலேயே இருந்த `துரந்தர்'
மூதாட்டி கொலை - 15 நாட்களுக்கு பின் தூய்மை பணியாளர் கைது திருப்பத்தூர் கியூ பிரான்ச் அலுவலகம் முன்பு பழ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே அலுவலகத்தின் தூய்மைப் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திரா என்ற மூதாட்டி, கடந்த 27-ஆம் தேதி முட்டை குடோன் ஒன்றில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தக் கொடூர கொலை தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார், செல்போன் டவர் லொகேஷன் மூலம், அதே கியூ பிரான்ச் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்த ராமு என்பவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராமு, மூதாட்டியிடம் வாங்கிய கடனைத் தீர்க்கவும், அவரது 6 கிராம் தங்க நகையைக் கொள்ளையடிக்கவும் இந்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், போலீசாரின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் திட்டங்களை கியூ பிரான்ச் அலுவலகத்திலேயே இருந்து ஒட்டுக் கேட்டு, அதற்கேற்ப மாஸ்டர் பிளான் போட்டு 15 நாட்கள் தப்பி வந்ததாகக் கூறி போலீசாரையே அதிர வைத்துள்ளார்.
