Tirupathur | ஈமச்சடங்கு நிதி வழங்க லஞ்சம்.. பாய்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை.. மயக்கமடைந்த வட்டாட்சியர்
திருப்பத்தூர் நாட்றம்பள்ளியில், 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக தனி வட்டாட்சியர் வள்ளியம்மாளை கைது செய்ய முயன்றபோது அவர் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேகர் என்பவரின் தாயாருக்கான ஈமச்சடங்கு நிதி 25 ஆயிரம் ரூபாயை வழங்க, அவர் 3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் நிலையில், ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாயை அவர் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். பின்பு விசாரணையின் போது தனி வட்டாட்சியர் திடீரென மயக்கம் அடைந்த நிலையில், 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சூழலில் மருத்துவமனையில் செய்தியாளர்களை அனுமதிக்காததால் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
