குடிநீர் பிரச்சினை - நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

குடிநீர் பிரச்சினையை கண்டித்து, நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

குடிநீர் பிரச்சினையை கண்டித்து, நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. குன்னத்தூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக, சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்து, நடந்த இந்த முற்றுகை போராட்டத்தில் ஏராளமான பெண்கள், காலி குடங்களுடன் பங்கேற்றனர். கடந்த இரண்டு வருடங்களாக, குன்னத்தூர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்பதே, அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com