நெல்லை பேட்டையில் வாகன சோதனையில் அரிவாள்கள் பறிமுதல்...

நெல்லை பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி சோதனையிட்டனர்.
நெல்லை பேட்டையில் வாகன சோதனையில் அரிவாள்கள் பறிமுதல்...
Published on
நெல்லை பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் 2 அரிவாள்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், ரஸ்தா பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், மகேஷ் என்பதும், அங்குள்ள மதுபானக் கூடத்தில் வேலைபார்த்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பேசியதை தொடர்ந்து, எம்.ஜி.ஆர்.நகரில் அவர்கள் இருவரும் வசிக்கும் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 6 அரிவாள், ஒரு வாள் உள்ளிட்ட ஆயுதங்கள், மற்றும் ஒரு மான் கொம்பும் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com