

நெல்லை நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சௌந்தரசபையில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நடராச பெருமான் ஆனந்த தாண்டவ திருநடன காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரதவீதி ஈசான முக்கில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சிகொடுக்கும் வைபவமும், மாலைமாற்றும் நிகழ்வும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.