Tirunelveli | Sweets | நெருங்கிய தீபாவளி பண்டிகை சூடுபிடித்த பலகாரங்கள் தயாரிப்பு
தீபாவளியை ஒட்டி, நெல்லை பாபநாசம் அருகே கோவில்தேவராயன் பேட்டையில், விறகு அடுப்பில் கைமுறுக்கு, சீப்புச் சீடை, தட்டை, தேன்குழல், ரிப்பன் பக்கோடா உட்பட 16 வகையான பலகாரங்கள் தயாரிப்பு பணி சூடுபிடித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில், மொத்த ஆர்டரிலும், சில்லரையிலும் விற்பனை செய்வதற்காக பலகாரங்கள் தயார் செய்யும் பணி முழூவீச்சில் நடைபெற்று வருகிறது.. இதுகுறித்து பேசிய இனிப்பு கார வகைகள் தயாரிப்பாளர் கோவிந்தராஜ், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story
