நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தில் முன்விரோதம் காரணமாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கீழமுன்னீர்பள்ளம் மருதம்நகரை சேர்ந்த ராஜா என்பவர் பிராஞ்சேரி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிமுடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய போது, கீழமுன்னீர்பள்ளம் சிவன்கோவில் அருகே ராஜாவை வழிமறித்த 5 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டித்து மாணவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.