

தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி நீராவி முருகன் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்த நிலையில், போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், வள்ளியூர் அக்கசாலை அருகே ஒரு வீட்டில் தங்கியிருந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது, நீராவி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் தப்ப முன்றபோது, காரின் டயர் கழிவு நீர் கால்வாய்க்குள் சிக்கியது. இதயடுத்து, முருகனை ஆய்வாளர் தேவேந்திரன் நெருங்க முயன்ற போது, அவரை முருகன் அரிவாளால் தாக்கியுள்ளார். உடனே, தேவேந்திரன், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, முருகன் மற்றும் அவரது ஓட்டுநரை வளைத்து பிடித்தனர். உடன் இருந்தவர்கள் தப்பியோடிய நிலையில், நீராவி முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.