நெல்லை கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் பாண்டியம்மாள் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக போராட்டம் நடத்திய பேராசிரியர்கள் குற்றம்சாட்டினர். மேலும், அரசு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் பலருக்கு வழங்க வேண்டிய சலுகைகள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.