

நெல்லை மாவட்டம் வள்ளியூர் நான்கு வழிச் சாலை ஏர்வாடி மேம்பாலம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி, முட்புதருக்குள் இருந்து பெண் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண் கேரள மாநிலம் உதயம்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காணாமல் போன வித்யா என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வள்ளியூர் போலீசார் வித்யா சார்ந்த எல்லா வழக்குகளையும் கேரளா மாநிலம் உதயம்புதூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் வித்யாவை அவரது கணவரே கொலை செய்ததும், காரில் சடலத்தை கொண்டு வந்து வள்ளியூர் காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வித்யாவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.