இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி - 2 நாட்களாக சடலத்துடன் வசித்த மனநலம் பாதித்த மகன்

நெல்லையில் கொலை செய்யப்பட்ட தாயின் உடல் அருகே, மன நலம் பாதித்த மகன் கடந்த இரண்டு நாட்களாக "ராம்" பட பாணியில் அமர்ந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி - 2 நாட்களாக சடலத்துடன் வசித்த மனநலம் பாதித்த மகன்
Published on

நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் விமலா என்ற மூதாட்டி, மனநலம் பாதித்த மகன் அகிலனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், விமலாவின் மாடி வீட்டில் வாடகைக்கு இருந்தவர் வீட்டிற்குள் நுழைய முயற்சித்த போது, அகிலன் அவரை வழிமறித்து, தனது தாய் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்ததில், விமலா தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார். , முதற்கட்ட விசாரணையில் விமலா தலையில் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் என்ன, யார் கொலை செய்தார்கள் அல்லது மனம் நலம் பாதித்த மகனே கொலை செய்தாரா என்ற கோணத்தில் பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

X

Thanthi TV
www.thanthitv.com