

நெல்லை மாவட்டம் கூடங்குளம் வி.ஜி.எஸ் நகரை சேர்ந்த தம்பதி ஜோன்ஸ் ராஜ் - சுயம்புகனி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஜோன்ஸ்ராஜ், கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்று உள்ளார். இதனால், சுயம்புகனி தனது குழந்தை மற்றும் மாமனார், மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே, ஜோன்ஸ்ராஜின் பெற்றோர், சுயம்பு கனியிடம் வரதட்சணையாக நகை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். மேலும் நகையை கொடுக்காததால், நரேஷ் குமார் என்பவருக்கு வீட்டை விற்றுள்ளனர். இந்நிலையில், வீட்டை வாங்கிய நரேஷ் குமார், அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் துரைசாமி உள்ளிட்டோர் சுயம்பு கனியிடம், வீட்டை காலி செய்யுமாறு தகராறு செய்து, வீட்டில் உள்ள பொருட்களை வீதியில் வீசி உள்ளனர். இது தொடர்பாக சுயம்பு கனி கொடுத்த புகாரின் பேரில், 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.