Tiruchengode | Drug | கொரியரில் வந்த பார்சல்.. எதார்த்தமாக பிரித்து பார்த்த போலீசுக்கு பேரதிர்ச்சி

x

திருச்செங்கோட்டில் தபால் மூலம் போதை மாத்திரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர். பின்னர், அவர்களை பரிசோதனை செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பார்சலை பறிமுதல் செய்தனர். அந்த பார்சல் கொரியர் மூலம் ராஜஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் அதில் 1000 போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து அந்த 2 இளைஞர்களையும் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்