Tiruchendur | திருச்செந்தூர் கோயிலில் மரம் முறிந்து விழுந்ததில் இளைஞர் படுகாயம்
கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் சென்னை இளைஞர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில், மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். சென்னை பள்ளிக்கரனையை சேர்ந்த ஆரிப் என்பவர் முருகன் கோவிலுக்கு சென்ற நிலையில், யானை மண்டபம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது வேப்பமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில், இளைஞருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Next Story
