Tiruchendur Murugan Temple | திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் பரபரப்பு அறிவிப்பு

x

யாகசாலை தகடுகள் விற்பனை செய்யப்படுவதாக, சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை, நம்பி ஏமாற வேண்டாம் என திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா யாகத்தகடுகள், சூரசம்ஹாரத்தன்று கோவில் அலுவலகம் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் யாகத்தகடுகள் விற்பனை செய்யப்படுவதாக சிலர், சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதையடுத்து அந்த போலியான செய்தியை, நம்ப வேண்டாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்