Tiruchendur "விஜய்க்கு அரோகரா.." திருச்செந்தூரில் விதிகளை மீறி தவெக தொண்டர்கள் ரீல்ஸ்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் விதிகளை மீறி த.வெ.க தொண்டர்கள் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு அரோகரா என்றும், த.வெ.க.வுக்கு அரோகரா என்றும் கூறியதுடன், விஜய் புகைப்படத்தை காண்பித்து, பக்தர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவதற்கும், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்குள் ஒலித்த த.வெ.க ஆதரவு கோஷம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்