திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் - பெயர் வைத்ததில் கருத்து வேறுபாடு

x

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு பெயர் வைத்ததில் திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை - தேசிய நெடுஞ்சாலை அருகே திண்டிவனம் நகராட்சி சார்பில், 25 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு இந்த மாதம் இறுதி அல்லது ஜனவரி 5-ஆம் தேதிக்குள் திறக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், திண்டிவனத்தில் ஏற்கனவே இருந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்ற பெயரையே வைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது.

இதனிடையே, புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திரா காந்தி என்ற பெயரில் இருந்த பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்