TN Rain Alert | ``வரும் 8ஆம் தேதி வரை..’’ தமிழகம், புதுவைக்கு அலர்ட்

x

"வரும் 8ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு"

வருகிற 8ம் தேதி வரை தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை புதனன்று நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்