காவல் நிலையம் முன்பு அரிவாளோடு டிக்டாக் செயலியில் படமெடுத்த மூவர் கைது

தலையாமங்கலம் காவல் நிலையம் முன்பு அரிவாளோடு டிக்டாக் செயலியில் படமெடுத்த மூவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையம் முன்பு அரிவாளோடு டிக்டாக் செயலியில் படமெடுத்த மூவர் கைது
Published on
தலையாமங்கலத்தை சேர்ந்த ஐயப்பன், ராஜவேல், பிரதீப் ஆகிய மூவரும் பெண் கொடுமை சட்டத்தில் வழக்கொன்றில் கைதாகி சிறையில் இருந்தனர். கடந்த 11ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த மூவரும், தலையாமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர். அப்போது, காவல் நிலைய வளாகத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றுமாறு காவல் உதவி ஆய்வாளர் உத்தரவிட்டுள்ளார். அந்த மூவரும் காவல் நிலைய வாயிலில் கையில் அரிவாள், கத்தியோடு நின்று நின்று tic tac செயலியில் படம்பிடித்து சமூக வலை தளங்களில் பரப்பி உள்ளனர். இது தொடர்பாக தற்போது மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நிபந்தனை ஜாமினில் உள்ள அவர்கள் மீது, மேலும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com