டிக்டாக் செயலியில் பதிவிட சாலையில் கத்தியை உரசி தீப்பொறி பறக்கவிட்ட இளைஞர்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம் தீயம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண்குமார்,மணிகண்டன் ஆகியோர், வெல்டிங் கடையில் வேலை செய்கின்றனர்.
டிக்டாக் செயலியில் பதிவிட சாலையில் கத்தியை உரசி தீப்பொறி பறக்கவிட்ட இளைஞர்கள் கைது
Published on

திருவள்ளூர் மாவட்டம் தீயம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண்குமார், மணிகண்டன் ஆகியோர், வெல்டிங் கடையில் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். அப்போது கத்தியை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவிட்டு, கூச்சலிட்டபடி சென்றுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் கைது செய்து, பட்டா கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், "டிக்-டாக்" செயலியில் வீடியோ எடுப்பதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோல் நடந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com