டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி தற்கொலை செய்து கொள்வதாக வெளியிட்ட பரபரப்பு வீடியோ

டிக்-டாக் பிரபலமான சூர்யாதேவி, தற்கொலை செய்து கொள்வதாக வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்தி நகரில் வசித்து வருபவர் டிக்-டாக் பிரபலம் சூர்யா தேவி. இவர், சமீபத்தில் மதுரையில் மற்றொரு டிக்-டாக் பிரபலமான சிக்கா என்ற சிக்கந்தரை சாலையில் வைத்து செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சூர்யா தேவி, நேற்று மதுரை காவல்துறை உயரதிகாரிக்கு அனுப்பிய வீடியோவில், மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com