கண்டமனூர் காவல்நிலையத்தில் டிக் டாக் வீடியோ - இளைஞர் கைது

ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் காவல்நிலையத்தில் வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கண்டமனூர் காவல்நிலையத்தில் டிக் டாக் வீடியோ - இளைஞர் கைது
Published on
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் காவல்நிலையத்தில் வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெருமாள்பட்டியை சேர்ந்த பரமேஸ்வரன், கண்டமனூர் காவல்நிலையத்தில் வீடியோ எடுத்து டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையடுத்து காவல்நிலையத்தில் அத்துமீறு நுழைதல், அரசு , பொது சொத்தை கலங்கப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் பரமேஸ்வரனை கைது செய்துள்ளனர். வீடியோவை எடுத்த, பரமேஸ்வரன் நண்பர் தங்கேஸ்வரனையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com