நட்ட நடு ரோட்டில் ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்த புலி - வைரலாகும் வீடியோ
முதுமலை வனப்பகுதியில் சாலையில் படுத்து ஓய்வெடுத்த புலியின் வீடியோ வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிக்குட்பட்ட மாயார், சிங்காரா, மசினகுடி, உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளில் யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும்.
இந்த நிலையில் இரவு மாயார் கிராமத்திற்கு செல்லும் சாலையில் புலி ஒன்று, ஒய்யாரமாக படுத்து ஓய்வெடுத்தது. வாகன வெளிச்சம் புலியின் மீது பட்டும் பொறுமை காத்த புலி, நிதானமாக வனப்பகுதிக்குள் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
Next Story
