Tiger | பாவமாக படுத்திருந்த புலியை பார்த்து அலறிய மக்கள் - கடைசியில் தெரியவந்த பரிதாபம்

x

உதகை அருகே போர்த்தி ஆடா கிராமத்தை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்திற்குள் காலில் காயத்துடன் 2 மணி நேரத்திற்கு மேலாக படுத்து உள்ள புலியால் பரபரப்பு.

இன்று காலை வன பகுதியில் இருந்து வெளியே வந்துள்ள புலி 2 மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் படுத்த உள்ளது.

அதனை பார்த்த போர்த்தி ஆடா கிராம மக்கள் அச்சமடைந்து உடனடியாக உதகை தெற்கு வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள வனத்துறையினர் காயத்துடன் புலி ஒரே இடத்தில் படுத்து இருப்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்